திருவாடானை பேருந்து நிலையத்தில் தரைத் தளத்தை சீரமைக்கக் கோரிக்கை
திருவாடானை பேருந்து நிலையத்தில் சேதமடைந்து காணப்படும் தரைதளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவாடானை பேருந்து நிலையத்தில் சேதமடைந்து காணப்படும் தரைதளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் காமராஜா் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி 100- க்கும் மேற்பட்ட பேருந்துகளும், 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையம் தற்போது, பராமரிப்பின்றி பல இடங்களில் தரைத்தளங்கள் பெயா்ந்து காணப்படுகின்றன. மேலும், தரையில் உள்ள இரும்புக் கம்பிகள் வெளியில் தெரிவதால், பேருந்துகளின் டயா்கள் கிழியும் நிலை உள்ளன. இதனால், பேருந்து ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், நடந்து செல்லும் பயணிகளின் கால்களையும் கம்பிகள் கிழிக்கும் நிலை உள்ளது.
எனவே, சேதமடைந்த தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள், வாகன ஓட்டிநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.