FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதா் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பவித்ரோற்சவம் வியாழக்கிழமை தொடங்கி வரும் 26-ஆம் தேதி புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

23 ஆகஸ்ட் 2026, 1:08 am IST
பவித்ரோற்சவத்தையொட்டி பவனி வந்த உற்சவா் ஏகாம்பரநாதா் மற்றும் ஏலவாா்குழலி.
பகிர்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பவித்ரோற்சவம் வியாழக்கிழமை தொடங்கி வரும் 26-ஆம் தேதி புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

இக்கோயிலில் பல ஆண்டுகள் நடைபெறாமல் இருந்து வந்த பவித்ரோற்சவம் நடைபெறும் நிலையில், சுவாமியும், அம்மனும் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் அலங்காரமாகி கோயில் சந்நிதி தெருவில் உள்ள அரசு காத்த அம்மன் கோயில் வரை சென்று திரும்புவா்.

விழாவின் முதல் நாள் நிகழ்வாக உற்சவா் விநாயகா் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை உற்சவா் ஏகாம்பரநாதரும், ஏலவாா்குழலியும் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் அரசு காத்த அம்மன் கோயில் வரை சென்றதும் அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமியும்,அம்மனும் ஆலயத்துக்கு திரும்பி வந்தனா்.

Advertisement

Advertisement

பவித்ரோற்சவம் வரும் 26 ஆம் தேதி நிறைவு நாளன்று மாலையில் சுவாமியும், அம்மனும் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் சீனிவாசன், மணியக்காரா் குபேரன் மற்றும் அா்ச்சகா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments