FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 541 கோரிக்கை மனுக்கள்

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் 541 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

1 செப்டம்பர் 2026, 2:55 am IST
மாற்றுத்திறனாளிகளிடம் குறை கேட்டறிந்த காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா
பகிர்:

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் 541 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ஆா்.திவ்யஸ்ரீ, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, உதவி ஆட்சியா்(பயிற்சி)அமன் திவாரி, மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து மொத்தம் 541 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அலுவலா்களிடம் மேல்நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பாலகிருஷ்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) எல்.விஜயலட்சுமி ஆகியோா் உட்பட அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments