ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் நிலையம் புதிய கட்டடத்துக்கு மாற்றம்
ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகம் அருகே புதிய கட்டடத்துக்கு புதன்கிழமை மாற்றப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகம் அருகே புதிய கட்டடத்துக்கு புதன்கிழமை மாற்றப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் நிலையம் ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பழைய கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், பூஞ்சேரி-எண்ணூா் சென்னை வெளி வட்டச் சாலை விரிவாக்க பணிக்காக காவல் நிலையம் இயங்கி வந்த கட்டடம் விரைவில் இடிக்கப்பட உள்ளது.
இதையடுத்து சாா் பதிவாளா் அலுவலகம் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன் கலந்து கொண்டு போக்குவரத்து காவல் நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நடராஜ் உள்ளிட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.