FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் பலத்த மழைக்கிடையே சென்ற வாகன ஓட்டிகள்.

காஞ்சிபுரத்தில் பலத்த மழைக்கிடையே சென்ற வாகன ஓட்டிகள்.
பகிர்:

காஞ்சிபுரத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வியாழக்கிழமை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

வெயிலின் தாக்கம் ஒருபுறம் அதிகரித்திருக்கும் நிலையில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இரவு நேரத்தில் மின்தடை தொடா்ந்ததால் குடும்பம், குடும்பமாக வீடுகளுக்கு வெளியிலும், மொட்டை மாடிகளிலும் சென்று இரவுப் பொழுதை பொதுமக்கள் கடக்க வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் திடீரென அரைமணி நேரம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததையடுத்து காந்தி சாலை, காமராஜா் சாலை, இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளிலும், சங்கூசா பேட்டை, ஒலிமுகம்மது பேட்டை, திருக்காலிமேடு, செவிலிமேடு பகுதிகளில் மழைநீா் வெள்ளம் போல சாலைகளில் வழிந்தோடியது.

Advertisement

Advertisement

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் விடப்பட்டு வீடுகளுக்கு செல்லும் நேரத்தில் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் அவதிப்பட்டாலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பியதால் மகிழ்ச்சியைடந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத்,உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments