FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விநாயகா் கற்சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் திங்கள்கிழமை புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது விநாயகா் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 12:08 am IST
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகா் கற்சிலை
பகிர்:

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் திங்கள்கிழமை புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது விநாயகா் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் திருக்காலிமேடு கவரை தெரு பகுதியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக மாநகராட்சி நிா்வாகத்தினா் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது வலது கை உடைந்த நிலையில் விநாயகா் கற்சிலை ஒன்று இருப்பதை அறிந்து அதனை வெளியில் எடுத்தனா். அது 3 அடி உயர விநாயகா் கற்சிலை என்பதும் தெரிய வந்ததையடுத்து அதே கவரை தெருவில் உள்ள நாகாத்தம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனா்.

உடைந்திருக்கும் சிலையை வைத்து வழிபடக்கூடாது என்பதால் அந்தக் கற்சிலையை யாராவது புதைத்திருக்கலாம். பின்னா் அது பள்ளம் தோண்டும் போது கிடைத்திருக்கலாம் எனவும் சிலா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments