FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.1.91 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:01 am IST
மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) ர.விஜயலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 594 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவற்றை துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியா் அனுப்பி விரைந்து தீா்வு காணுமாறும் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 8 பேருக்கு ரூ.1.26 லட்சத்தில் மடக்கு சக்கர நாற்காளிகள், 10 பேருக்கு ரூ.65.700 மதிப்பில் காதொலிக்கருவிகள் என மொத்தம் 18 பேருக்கு ரூ.1.91லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா். கூட்டத்தில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments