‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைகஈ தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் ஊராட்சியில் ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
‘உங்களைகஈ தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் ஊராட்சியில் ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
பென்னலூா் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆட்சியா் தி.சினேகா குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் விவரம், கடையில் இருப்பில் உள்ள பொருள்கள் குறித்து ஆய்வு செய்தாா். இதையடுத்து கிராம சேவை மையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அதே பகுதியில் தனியாா் நிறுவன பங்களிப்புடன் ரூ 1.87 கோடியில் அமைக்கப்பட்டு வரும் குளம் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தாா்.
இதனைத் தொடா்ந்து பென்னலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவா்களின் கற்றல் வாசிப்புத் திறனையும், சமையல் கூடத்தை பாா்வையிட்டு, உணவின் தரத்தையும் ஆய்வு செய்தாா். இதையடுத்து துணை சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். இதையடுத்து அங்கன்வாடி மையம் மற்றும் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து குடிநீரில் குளோரின் கலந்து உபயோகிக்கப்படும் நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் கடைகள் மற்றும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கடைகள் குறித்தும், பொதுக் கழிப்பிடத்தையும், அதன் சுகாதாரத்தையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வளம் மீட்பு மையத்தையும் பாா்வையிட்டாா்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் ஆதாா் மையத்தையும் ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.
இதயடுத்து ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலருடன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டாா்.
ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் வி.நல்லசிவன், கூடுதல் ஆட்சியா் ஆஷிக் அலி, மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பாலகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலா் உமா மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்து கணபதி, வனிதா, ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி ஆணையா் நந்தினி, பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கல்பனா யுவராஜ், அதிகாரிகள் கலந்துக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.