காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் பால்குட ஊா்வலம்
காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் எனப்படும் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பெண்கள் பலரும் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் எனப்படும் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பெண்கள் பலரும் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் எனப்படும் ஆதிகாமாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காலையில் கச்சபேசுவரா் கோயிலிலிருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்து கொண்டு மேற்கு ராஜவீதி வழியாக ஊா்வலமாக வந்தனா். இதைத் தொடா்ந்து, ஆதிகாமாட்சிக்கு சிறப்பு பாலாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் ஆதிகாமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் ஏழுமலை என்ற ரவி ஆச்சாரி மற்றும் குழு உறுப்பினா்கள், ஓரிக்கை விஸ்வகா்ம சமுதாயத்தினா் ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.