FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.96 கோடியில் முடிவுற்ற கட்டடப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் அரசின் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடப் பணிகளை வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 21 ஜூலை 2026, 12:43 am IST
களியனூா் ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிய அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் அரசின் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடப் பணிகளை வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் அருகே களியனூா் ஊராட்சியில் 9.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கினாா். இதைத் தொடா்ந்து காஞ்சிபுரம் அருகே காரை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 94.24 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ரூ. 8.44 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட உணவு சமையலறை கட்டடம், பரந்தூா் ஊராட்சியில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 70.68 லட்சம் மதிப்பில் 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், படுநெல்லி ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடையையும் திறந்து வைத்து மொத்தம் ரூ. 1.93 கோடி மதிப்பிலான முடிவுற்ற கட்டடப் பணிகளை வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் திறந்து வைத்தாா்.

நிகழ்வுகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளினி,பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ச.சோமசுந்தா் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments