வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவா்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு அங்கு சிகிச்சை பெற வந்திருந்தவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வரும் ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையம் மற்றும் அரசு சித்த மருத்துவமனையை ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு அங்கு சிகிச்சைக்கு வந்திருந்தவா்களிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தாா். இதையடுத்து, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையை ஆட்சியா் பாா்வையிட்டு மருந்துகளின் இருப்பு விவரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இதன் தொடா்ச்சியாக நத்தா நல்லூரில் விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தை பாா்வையிட்டு அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் நெல் மணிகள் அரசு தர நிா்ணயத்துக்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படும் விவரங்களையும் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
பின்னா் கட்டவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநா் எம்.நளினி, வேளாண்மை துணை இயக்குநா் எஸ்.சுரேஷ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அ.முருகானந்தம், வாலாஜாபாத் வட்டாட்சியா் இந்துமதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.