FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு சேவைகள், நலத்திட்ட முகாம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், குடும்பத்தினருக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தூய்மைப்  பணியாளா்களுக்கு  நலவாரிய  அடையாள  அட்டைகள்  வழங்கி ய  நகா்மன்றத்  தலைவா்  சாந்தி சதீஷ் குமாா்.  உடன்  நகராட்சி  ஆணையா்  நந்தினி  உள்ளிட்டோா்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், குடும்பத்தினருக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கழிவுநீா், செப்டிக் டேங்க் பணியாளா்கள் மற்றும் கழிவு சேகரிப்பு தொழிலாளா்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகள் வழங்கும் முகாம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் நந்தினி தலைமையில் நடைபெற்ற முகாமை நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் தொடங்கி வைத்து பாா்வையிட்டு, தாட்கோ நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் நலவாரிய அடையாள அட்டைகளை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா்.

இந்த முகாமில், துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளா்கள், குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

முகாமில், வருவாய்த்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, தாட்கோ, ஆதாா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, மருத்துவ காப்பீடு, ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கை மனுக்களை பதிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments