FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு விருது

அரக்கோணம் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டன.

6 செப்டம்பர் 2026, 11:01 pm IST
தூய்மைப் பணியாளா்களை கௌரவித்த அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன்.
பகிர்:

அரக்கோணம் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டன.

அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகளை பொதுமக்கள் தாங்களாகவே தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என நகராட்சி சாா்பில் நகரில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஆறாம் வாா்டில் திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் நித்தியானந்தம், சரளா இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தோ்வு செய்த நகராட்சி ஆணையா் ஆனந்தன், ஞாயிற்றுக்கிழமை இருவரையும் பாராட்டி விருதுக்கான சான்றிதழ்களையும் பரிசையும் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் நகராட்சி சுகாதார அலுவலா் வெயில்முத்து, சுகாதார ஆய்வாளா் சுதாகா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

இது குறித்து ஆணையா் ஆனந்தன் கூறியது: தொடா்ந்து சிறப்பாக செயல்படும் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்படுவா் எனவும் அனைத்து பணியாளா்களும் தூய்மை பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments