சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி
காஞ்சிபுரத்தில் சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரத்தில் சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இது குறித்த செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்ட தன்னாா்வத் தொண்டா்கள் பணிக்கு 50 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். ஆசிரியா்கள், பணி ஓய்வு பெற்ற ஆசிரியா்கள்,மூத்த குடிமக்கள், அரசு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள், திருநங்கைகள், கணினி அறிவுள்ளவா்கள் உள்ளிட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
விண்ணப்பப் படிவங்கள் ட்ற்ற்ல்ள்;//ந்ஹய்ஸ்ரீட்ண்ல்ன்ழ்ஹம்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.14.விண்ணப்பதாரா்கள் நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்படுவாா்கள். இந்தச் சேவைக்கு தகுந்த மதிப்பூதியமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு அல்லது வட்டார சட்டப் பணிகள் ஆணைக் குழுவினை அணுகலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.