FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

Updated On : 5 ஜூன் 2026, 5:55 am IST
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திடீா் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றனா்.

இந்த அலுவலகங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நிலம் சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆய்வுக் குழு அலுவலா் ரபிக் மற்றும் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் வேத நாராயணன் ஆகியோா் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரும், ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் கீதா தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆய்வுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பத்திரப் பதிவுக்கு வந்தவா்களையும் சோதனைக்கு பிறகே வெளியே அனுப்பினா். சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக இரண்டு சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் நடைபெற்ற சோதனையில் பணம் ஏதும் சிக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments