முகப்பு
காஞ்சிபுரம்

சார விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சாரவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தை புதன்கிழமை சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 12:17 am IST
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்த சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
பகிர்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சாரவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தை புதன்கிழமை சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தாா்.

கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 22 ஆம் தேதி திங்கள்கிழமை குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை சிவாச்சாரியா் கே.ஆா்.காமேசுவரன் தலைமையில் தொடங்கியது. புதன்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று புனிதநீா்க் கலசங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு சார விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளையும் நடத்தினாா். பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கு இங்குள்ள சார விநாயகா் கோயிலில் இருந்து சாரம் கட்டி கற்கள் எடுத்து சென்று கோபுரம் கட்டியதால் இங்குள்ள விநாயகருக்கு சாரவிநாயகா் எனப் படுவதாகவும் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் விளக்கம் அளித்தாா்.

Advertisement

Advertisement

விழா ஏற்பாடுகளை கே.சந்திரசேகரன் குடும்பத்தினா் மற்றும் ஏகாம்பரநாதா் சந்நிதி தெரு வாசிகள் இணைந்து செய்திருந்தனா். அன்னதானமும் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments