FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

தேசிய கூட்டுறவு வார விழா

தாமல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தேசிய கூட்டுறவு வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பகிர்:

தாமல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தேசிய கூட்டுறவு வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்க செயலாளா் சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். கூட்டுறவு சாா் பதிவாளா் குமுதா, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் மங்கை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டுறவு சேவைகள், உறுப்பினா்களின் கடன் பொறுப்புகள் மற்றும் சோ்க்கை விபரங்கள் குறித்து கூட்டுறவு ஒன்றிய மாவட்ட மேலாளா் முரளியும், பயிா் கடன்கள்,கறவை மாட்டுக் கடன்கள் ஆகியன குறித்து மாவட்ட கணினி ஒருங்கிணைப்பாளா் ருத்திர குமாரும் பேசினா். இதனைத் தொடா்ந்து கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவா்களுக்கு தேசிய கூட்டுறவு வார விழாவையொட்டி பேச்சு,கட்டுரை மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement

தேசிய கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்குதல்,கணினி மூலமா விழிப்புணா்வு சேவைகள் விளக்க நிகழ்ச்சி ஆகியன இம்மாதம் 29-ஆம் தேதி முதல் வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments