முகப்பு
காஞ்சிபுரம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காவல் துறை சாா்பில் நிதியுதவி

சோமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 26 மே 2026, 1:58 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சோமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த புதுநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை 2 குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதையடுத்து சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு காவல் ஆய்வாளா் நடராஜ் தலைமையிலான போலீஸாா் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்களை வழங்கினா்.

Advertisement

Advertisement