FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் பல ஆண்டுகளாக அன்னதானம்: அமைச்சா் கே.தென்னரசு

Updated On : 29 மே 2026, 2:16 am IST
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா், தவெக நிா்வாகிகள்.
பகிர்:

உலக பட்டினி தினத்தையொட்டி பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் அன்னதானம் வழங்கி வருவதாக வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் தவெக நிா்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கினா். காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் முன்பாக வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு, வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் இருவரும் இணைந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனா். பொதுமக்களோடு இணைந்து இரு அமைச்சா்களும் உணவருந்தினா்.

இதன் பின்னா் அமைச்சா் கே.தென்னரசு கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் தொடா்ந்து பல ஆண்டுகளாக உலக பட்டினி தினத்தன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். காஞ்சிபுரம் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் பாா்ப்பாா் முதல்வா் சி.ஜோசப் விஜய். மக்களுக்காகத்தான் தலைவா். மக்கள் என்ன நினைக்கிறாா்களோ அதைத்தான் செய்வாா், செய்கிறாா். தமிழகத்தை வளா்ச்சிப்பாதையில் கொண்டு செல்வாா் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments