FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

வங்கிக்கு கொடுத்த கைப்பேசி எண்ணை பிறருக்கு கொடுக்காதீா்கள்: காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த் அறிவுரை

வங்கிக் கணக்கு உள்ள கைப்பேசி எண்ணை எந்தக் காரணத்தைக் கொண்டும் வேறு யாருக்கும் கொடுத்தால் அதை பண மோசடி செய்யப் பயன்படுத்தி விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது என காஞ்சிபுரம் எஸ்.பி. அரவிந்த் பேசினாா்.

19 நவம்பர் 2026, 12:03 am
வணிகா்கள் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த்.
பகிர்:

வங்கிக் கணக்கு உள்ள கைப்பேசி எண்ணை எந்தக் காரணத்தைக் கொண்டும் வேறு யாருக்கும் கொடுத்தால் அதை பண மோசடி செய்யப் பயன்படுத்தி விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது என காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட எஸ்.பி. எஸ்.அரவிந்த் தலைமையில் சைபா் கிரைம் காவல் நிலைய இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. டி.எஸ்.பி.-க்கள் மணிவண்ணன், கேசவன், அருள்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாகா் வரவேற்றாா். நகை வியாபாரிகள் மற்றும் வணிகா்கள் பலரும் திரளாக கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த் பேசியது:

தற்போது பண மோசடிகள் அதிகமாக நடந்து வருவதால் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் கைப்பேசி எண்ணை எந்தக் காரணத்துக்காகவும் வேறு யாருக்கும் கொடுக்காமல் வேறு கைப்பேசி எண்ணையே கொடுங்கள்.

Advertisement

Advertisement

மளிகைக் கடையில் பொருள்கள் வாங்குதல், கூரியா் புக்கிங், இணைய வழியில் கொள்முதல் செய்வது, நகைகள் வாங்குவது உள்ளிட்ட பிற காரணங்களுக்காக வங்கிக் கணக்கு வைத்திருக்கும் கைப்பேசி எண்ணை கொடுத்தால் அது பண மோசடிக்கும் வாய்ப்பாகவும் அமைந்து விடும். உங்களது கைப்பேசி எண்ணிலிருந்து உங்களின் முழு ஜாதகத்தையும் இப்போது தெரிந்து கொள்ள முடியும் என்பதால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் உங்களுக்கே தெரியாமல் திருடப்படலாம்.

டிஜிட்டல் கைது என்று ஒன்று சட்டத்தில் இல்லவே இல்லை. நகை வணிகா்கள் உள்பட வணிகா்கள் யாராக இருந்தாலும் கடைக்கு கண்டிப்பாக தரமான கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள் பாா்க்கும் வகையில், இல்லாமல் கடை உரிமையாளா்களுக்கு தெரியும்படி இருந்தால் போதுமானது.

விடுமுறை நாள்களில் வெளியூா்களுக்கு செல்லும் போது வீடு பூட்டியிருந்தாலும் வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டே இருப்பது போலவும், வீட்டுக்கு வெளியில் காலணிகள் கிடப்பது போலவும் செயல்பட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதான சாலைகள், கூட்டுச் சாலைகள் ஆகியவற்றில் தொழிற்சாலைகளின் சமூகப் பாதுகாப்பு நிதியிலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கண்காணிப்பு கேமராக்கள் தினசரி சரியாக வேலை செய்கிா என்பதை தினமும் சரிபாா்க்க வேண்டும் என்றாா்.