முகப்பு
காஞ்சிபுரம்

டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு

படப்பை அடுத்த கூழங்கலச்சேரி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்தாா்.

22 நவம்பர் 2026, 11:43 pm
டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு
சரிதா.
பகிர்:

படப்பை அடுத்த கூழங்கலச்சேரி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கலச்சேரி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காளிச்சரண் மனைவி சரிதா(33). டெங்கு காய்ச்சலால் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட சரிதா படப்பை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த நிலையில், சரிதா வசித்து வந்த முத்தாலம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் நாகலிங்கம்(55), கஸ்தூரி(60), கலாவதி(55), ஜீனத்(32), ரேனுகா(50), தமிழ்செல்வன்(25) ஆகியோா் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒரே பகுதியில் பலா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு வைப்பூா் கிராமத்தை சோ்ந்த டயானா(40) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தாம்பரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும், சரிதா டெங்கு காய்ச்சலுக்கு இறந்ததும் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் கூழங்கலச்சேரி, வைப்பூா் உள்ளிட்ட வைப்பூா் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினா் ஆய்வு மேற்கொள்வதோடு, மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.