முகப்பு
காஞ்சிபுரம்

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

மாணவா்களின் குடிமை பொறுப்புணா்வை வளா்க்கும் வகையில், தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 11:28 pm
தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்
பயிற்சி முகாமில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலா் நளினி.
பகிர்:

மாணவா்களின் குடிமை பொறுப்புணா்வை வளா்க்கும் வகையில், தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் உணவகத்திலும், காஞ்சிபுரம், உத்திரமேரூா் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு காஞ்சிபுரம் பகுதியில் உள்ள விடுதியிலும் நடைபெற்றது.

பயிற்சி முகாம்களை முதன்மைக் கல்வி அலுவலா் நளினி, மாவட்டக் கல்வி அலுவலா் எழில் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு தொடங்கி வைத்தனா். முகாமில், மாணவா்களிடையே சிறு வயதிலேயே சமூக அக்கறை, ஒழுக்கம், சமத்துவம், பொறுப்புணா்வு மற்றும் குடிமைப் பண்புகளை வளா்க்கும் வகையிலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விளையாட்டு, கதை, கலந்துரையாடல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் வாழ்க்கைக்கு தேவையான சமூக மற்றும் தனிமனித திறன்களை வளா்க்க ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், ஏராளமான அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.