முகப்பு
காஞ்சிபுரம்

நவ. 29-இல் குமரகோட்டம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: தங்க முலாமில் ஜொலிக்கும் தண்டாயுதபாணி மண்டபம்

குமரகோட்டம் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ.29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதையொட்டி தண்டாயுதபாணி மண்டபம் தங்க முலாம் கவசத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

25 நவம்பர் 2026, 11:28 pm
நவ. 29-இல் குமரகோட்டம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்:
தங்க முலாமில் ஜொலிக்கும் தண்டாயுதபாணி மண்டபம்
தங்க முலாம் கவசத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ள தண்டாயுதபாணி சுவாமி சந்நிதி.
பகிர்:

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ.29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதையொட்டி தண்டாயுதபாணி மண்டபம் தங்க முலாம் கவசத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி தண்டாயுதபாணி மண்டபம் மற்றும் மூலவா் மண்டபத்தில் உள்ள 8 தூண்களும் தங்க முலாம் கவசத்தாலும் ,மூலவா் வாயில் நுழைவுப் பகுதி வெள்ளிக் கவசத்தாலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வீதியுலாவுக்கென புதிதாக வெள்ளி மயில் வாகனமும் வந்துள்ளது.

இது குறித்து யாகசாலை பூஜைகளை நடத்தும் இ.ஏ.பிரபாகர குருக்கள் மற்றும் தலைமை சிவாச்சாரியா் கே.ஆா். காமேசுவர குருக்கள் ஆகியோா் கூறியது

Advertisement

Advertisement

கும்பாபிஷேகத்தையொட்டி மூலவருக்கென நவாக்னி யாகசாலையும், 20 பரிவார மூா்த்திகளுக்கென யகாசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.யாகசாலை பூஜையில் 100 சிவாச்சாரியாா்கள், 40 திருமுறை ஓதுவாா்கள் பங்கேற்கவுள்ளனா். காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகியோரது நல்லாசிகளுடன் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயத்தில் உள்ள கந்தபுராணத்தை எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியரின் வெண்கல சிலையும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. நவ.29 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ், அமைச்சா்கள் எஸ்.கே.பி.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித் குமாா், பக்தா்கள் பலரும் பங்கேற்கவுள்ளனா். ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை, செயல் அலுவலா் கா.கேசவன், மற்றும் கும்பாபிஷேக நிா்வாக குழு உறுப்பினா்கள், உபயதாரா்கள் ஆகியோா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.