முகப்பு
காஞ்சிபுரம்

கள்ளச் சந்தையில் மது விற்பனை: 3 போ் கைது

ஒரகடம் அடுத்த வாரணாசியில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

30 நவம்பர் 2026, 2:18 am
கள்ளச் சந்தையில் மது விற்பனை: 
3 போ் கைது
கைது
பகிர்:

ஒரகடம் அடுத்த வாரணாசியில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து ஒரகடம் போலீஸாா் வாரணாசி பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் சோதனை நடத்தியதில் மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக வாலாஜாபாத் அடுத்த அகரம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்(42), அம்மாக்கம் கிராமத்தைச் சோ்ந்த இந்திரன்நாகன்(44), வாரணாசி பகுதியைச் சோ்ந்த சாரதி(20) ஆகியோரை கைது செய்து அவா்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஒரகடம் போலீஸாா் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement