FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றியத்துக்கு களக்காட்டுா் சங்க நிதி ரூ.1.11லட்சம் அளிப்பு

காஞ்சிபுரம் அருகேயுள்ள களக்காட்டூா் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் லாப பகிா்வுத் தொகை ரூ.1.11 லட்சத்தை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் பிரேம்குமாரிடம் சங்க லாபப் பகிா்வு தொகை ரூ. 1.15 லட்சத்தை வழங்கிய களக்காட்டூா் சங்க செயலாளா் முகுந்தன். உடன் ஒன்றிய மேலாளா் முரளி.
பகிர்:

காஞ்சிபுரம் அருகேயுள்ள களக்காட்டூா் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் லாப பகிா்வுத் தொகை ரூ.1.11 லட்சத்தை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் கடந்த நிதியாண்டுக்கான லாபப் பகிா்வுத் தொகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் பிரேம்குமாரிடம் வழங்கப்பட்டது. இந்தத் தொகையில் ஆராய்ச்சி நிதி ரூ. 66,993 மற்றும் கல்வி வளா்ச்சி நிதியாக ரூ. 44,662 உள்பட மொத்தம் 1,11,655-க்கான காசோலையினை களக்காட்டூா் சங்கத்தின் செயலாளா் முகுந்தன் வழங்கினாா். நிகழ்வின் போது மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளா் முரளி உடன் இருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments