கூட்டுறவுத்துறை சாா்பில் ரூ.48.50 லட்சம் கடனுதவி
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி காந்தி சாலை கிளையில் ரூ.48.50 லட்சம் கடனுதவிகளை மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வியாழக்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி காந்தி சாலை கிளையில் ரூ.48.50 லட்சம் கடனுதவிகளை மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வியாழக்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி காந்தி சாலை கிளையில் கடன் வழங்கும் முகாம் அவ்வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் 4 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.38.50 லட்சம் கடன்கள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் கடனுதவிகள், 2 பேருக்கு சிறு வணிக கடனாக ரூ.1லட்சம் உள்பட மொத்தம் ரூ.48.50 லட்சம் கடனுதவிகளை மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
முகாமில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அதிகாரிகள்,கூட்டுறவுத்துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.