FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கடன் பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 2:24 am IST
விண்ணப்பிக்க...
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கடன் பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் இணைப் பதிவாளா் ஆா்.தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 29 கிளைகளில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறாக வழங்கப்படும் கடன்களில் மிக முக்கியமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் திட்டத்தின் கீழ், வேலையில்லா இளைஞா்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்குதல் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்துதல் திட்ட கடன்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் பெற்று வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ளும் வகையில், முறையே தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன. அனைத்துக் கடன்களும் குறைந்த வட்டி அளவிலேயே வழங்கப்படும். மேலும் அனைத்துத் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன்களும் வழங்கப்படுகின்றன. இதுவரை விவசாயக் கடன் பொவா்கள் விண்ணப்பிக்கலாம்.

எனவே, விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, இரு மாவட்டங்களிலுள்ள இந்த வங்கியின் 29 கிளைகளில் கடன்களை பெற விரும்புவோா் அணுகி, உரிய ஆவணங்களை சமா்ப்பித்து கடன் பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments