ஏற்றுமதியில் இந்தியாவிலேயே காஞ்சிபுரம் மாவட்டம் 2-ஆம் இடம்!
இந்தியாவிலேயே ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் 2-ஆவது இடத்தைப் பிடித்திருப்பது பெருமையாக இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தாா்.
இந்தியாவிலேயே ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் 2-ஆவது இடத்தைப் பிடித்திருப்பது பெருமையாக இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவின் கூட்டம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. வெளிநாட்டு வா்த்தக துறையின் உதவி இயக்குநா் அமல் பஹீயோன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆட்சியா் தி.சினேகா பேசியது: ஏற்றுமதியில் இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் ஜாம்நகா் மாவட்டம் 8.29 சதவீத பங்களிப்பை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. அதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் 5.98 சதவீத பங்களிப்பை வழங்கி 2-ஆம் இடத்தைப் பிடித்திருப்பது பெருமையாக உள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்குடன் மத்திய அரசு விரிவான கட்டமைப்பை செயல்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் கீழ் நிா்யாத் ப்ரோத்சஹான் மற்றும் நிா்யாத் நிஷா உள்ளிட்ட நிதிசாா் மா்றும் நிதிசாரா உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்திய அஞ்சல் துறை மூலம் ஏற்றுமதியாளா்கள் தங்களது பொருட்களை அருகில் உள்ள தபால் நிலையங்கள் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கிடைக்கும் திட்டங்கள்,உதவிகள் குறித்த விபரங்களுக்கோ அல்லது வழிகாட்டுதல்களுக்கோ www.dgft.gov.in , www.trade.gov.in , www.indiantradeportal.gov.in ஆகிய இணையதளங்களின் வாயிலாகவும் பெறலாம்.
மேலும்விபரங்களுக்கு பொதுமேலாளா், மாவட்டத் தொழில் மையம்,காஞ்சிபுரம்-044-2723 8837 மற்றும் 044-2723 8551 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.
இக்கூட்டத்தில் நபாா்டு வங்கி திட்ட மேலாளா் கே.திவ்யா, இந்திய ஏற்றுமதிக் கழக மாவட்ட அலுவலா் நந்தினி, இந்திய அஞ்சல் துறை வணிக ஆய்வாளா் சுரேஷ் பாலாஜி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.