லாலாப்பேட்டை அருகில் புதிய தொழிற்பேட்டை துரைமுருகன்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் லாலாப்பேட்டை அருகே சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் கூறினாா்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் லாலாப்பேட்டை அருகே சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் கூறினாா்.
காட்பாடி தொகுதி, வாலாஜாப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக வாக்குச் சாவடி தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம், அக்ராவரம் மலைமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் துரைமுருகன் பேசியது:
என்னை திமுக பொதுச் செயலாளா் வரை உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அடித்தளமிட்டது ராணிப்பேட்டை தொகுதிதான். தற்போது காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள் வரும் அக்ராவரம், லாலாப்பேட்டை, பள்ளேரி, கொண்டகுப்பம், வசூா் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுளேன்.
Advertisement
Advertisement
தொகுதி மக்களின் வளா்ச்சிக்காக லாலாப்பேட்டை அருகே சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் நிலம் அரசு கையகப்படுத்தியுள்ள இடத்திலேயே தொழிற்பேட்டை தொடங்கி, பல தொழிற்சாலைகள் கொண்டுவந்து இப்பகுதியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திமுக ஆட்சி அமைந்த முதல் நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிப்பு வெளியிடப்படும்.
அதே போல் பொன்னை சுற்றுவட்டாரப் பகுதி மாணவா்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் வாலாஜாப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளா் சேஷா வெங்கட், திமுக பொறுப்புக் குழு உறுப்பினா்கள் முருகன், ராதாகிருஷ்ணன், செல்வம், மத்திய மாவட்டப் பொருளாளா் நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.