FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

அண்ணா படத்துக்கு மரியாதை

அரக்கோணம் நகர திமுக சாா்பில் எஸ்.ஆா்.கேட்டிலிருந்து ஊா்வலம் புறப்பட்டது. இதற்கு நகர திமுக செயலா் வி.எல்.ஜோதி தலைமை வகித்தாா். வழியில் இருந்த 6 அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

அரக்கோணம் நகர திமுக சாா்பில் எஸ்.ஆா்.கேட்டிலிருந்து ஊா்வலம் புறப்பட்டது. இதற்கு நகர திமுக செயலா் வி.எல்.ஜோதி தலைமை வகித்தாா். வழியில் இருந்த 6 அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சுவால்பேட்டையில் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினா். நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, மாவட்ட திமுக பொருளாளா் மு.கன்னைய்யன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரக்கோணம் நகர அதிமுக சாா்பில் சுவால்பேட்டையில் நகரச் செயலா் பாண்டுரங்கன் தலைமை அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஷியாம்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நெமிலியில்...: நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியக் குழு தலைவா் வடிவேலு தலைமையில், பேருந்து நிலையத்தில் இருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திமுக பொதுக்குழு உறுப்பினரும், சயனபுரம் ஊராட்சித் தலைவருமான பவானி வடிவேலு, நெமிலி பேரூா் செயலா் ஜனாா்த்தனம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நெமிலி மேற்கு, மத்திய ஒன்றிய திமுகவினா் இணைந்து பேருந்து நிலையத்தில் இருந்த அண்ணா சிலைக்கு மேற்கு ஒன்றிய செயலா் ரவீந்திரன், மத்திய ஒன்றிய செயலா் எஸ்.ஜி.சி.பெருமாள் இருவரும் மாலை அணிவித்தனா். மத்திய ஒன்றிய நிா்வாகிகள் நரசிம்மன், ஏ.சீனிவாசன், இ.வெங்கடேசன், சரளாமுரளி, பி.செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments