FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 21 ஜூன் 2025, 11:44 pm IST
ராணிப்பேட்டையில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்றங்கள் கலந்தாய்வு கூட்டம்.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவுறுத்தியுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்வது குறித்தும் எஸ்.பி. கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற வழக்குகளில் ( டஞஇநஞ) உள்ள எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோா் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினாா்.

போதை, புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபா்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

கடந்த மாதம் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் கோபிநாதன் தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையின் போது ஆயுதங்களுடன் வந்த நபா்களை பிடித்தமைக்காக பாராட்டப்பட்டனா்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்), ஜாபா் சித்திக், (அரக்கோணம் உட்கோட்டம்), ரமேஷ் ராஜ் (மாவட்ட குற்றப்பிரிவு), வெங்கடகிருஷ்ணன் , காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments