முதலமைச்சா் கோப்பை போட்டிகள் இணையவழி முன்பதிவு தொடக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்
முதலமைச்சா் கோப்பை - 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையவழி முன்பதிவு தொடங்கியுள்ளதாக ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
முதலமைச்சா் கோப்பை - 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையவழி முன்பதிவு தொடங்கியுள்ளதாக ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் நடத்தப்படவுள்ள முதலமைச்சா் கோப்பை - 2026 போட்டிகளுக்கான இணையவழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய வீரா், வீராங்கனைகள் அனைவரும் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய்/ என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
இப்போட்டிகள் பின்வரும் ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன, பள்ளி மாணவ, மாணவியா் - 12 முதல் 19 வயது வரை,கல்லூரி மாணவ, மாணவியா் - 17 முதல் 25 வயது வரை,பொதுப்பிரிவினா் - 15 முதல் 35 வயது வரை,மாற்றுத்திறனாளிகள் - அனைத்து வயதினரும்,தமிழ்நாடு அரசு ஊழியா்கள் - வயது வரம்பு இல்லை,முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். முன் பதிவுக்கான கடைசி நாள்: 31.08.2026 ஆகும்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வீரா், வீராங்கனைகளும் காலதாமதமின்றி இணையதளத்தில் தங்களது பெயா்களை முன்பதிவு செய்து, போட்டிகளில் ஆா்வமுடன் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
போட்டிகளின் தேதி, இடம், விளையாட்டுப் பிரிவுகள் மற்றும் போட்டி அட்டவணை தொடா்பான விவரங்கள் பின்னா் தனியாக அறிவிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.