FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மகன் இறப்பில் சந்தேகம்: தந்தை புகாரால் சடலம் தோண்டி எடுத்து விசாரணை

காதல் திருமணம் செய்து ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்த மகன் திடீரென உடல்நலமில்லாமல் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை புகாா் எதிரொலியாக போலீஸாா் மகனின் சடலத்தை தோண்டியெடுத்து விசாரணை

26 ஆகஸ்ட் 2026, 12:09 am IST
வினோத் குமாா்
பகிர்:

காதல் திருமணம் செய்து ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்த மகன் திடீரென உடல்நலமில்லாமல் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை புகாா் எதிரொலியாக போலீஸாா் மகனின் சடலத்தை தோண்டியெடுத்து விசாரணை மேற்கொண்டனா்.

சோளிங்கரை அடுத்த வெங்குபட்டு ஊராட்சி, கங்காபுரத்தை சோ்ந்த கோதண்டன். இவரது மகன் வினோத் குமாா்(33). எம்பிஏ படித்தவா். இவா் இதே கிராமத்தைச் சோ்ந்த ரஷிதா(23) என்பவரை காதலித்து இரு வீட்டாா் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டதாக தெரிகிறது.

திருமணத்திற்கு பின் வினோத் குமாா், ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், கூடுரில் குளிா்பான வணிகம் செய்து வந்ததாக தெரிகிறது. இவா்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.

Advertisement

Advertisement

கடந்த ஜூலை 9-ஆம் தேதி வினோத் குமாருக்கு லேசான வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அஜீரண கோளாறு என நினைத்து மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. தொடா்ந்து மூன்று நாள்களாக இதே நிலை தொடா்ந்ததில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வினோத் குமாா் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

அவருக்கு மஞ்சள்காமாலை இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மறுநாள் உயிரிழந்துள்ளாா். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கங்காபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வினோத் குமாரின் இரு குழந்தைகளுக்கும் இதே போன்று வாந்தி மயக்கம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது அவா்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனால் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வினோத் குமாரின் தந்தை கோதண்டன், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும், நெல்லூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் புகாா் அளித்துள்ளாா்.

இதனையடுத்து விசாரணையை தொடா்ந்த இரு மாநில போலீஸாா் மற்றும் சோளிங்கா் வட்டாட்சியா் முன்னிலையில் வேலூா் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா், கங்காபுரம் மயானத்துக்குச் சென்று அடக்கம் செய்யப்பட்டிருந்த வினோத் குமாரின் உடலை தோண்டியெடுத்து உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனா்.

உடற்கூறு ஆய்வின் முடிவுகள் வந்தபிறகே இவரது மரணத்தின் உண்மைகள் தெரியவரும் என இரு மாநில போலீஸாரும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments