முகப்பு
ராணிப்பேட்டை

உயா் கோபுர மின் விளக்குகள் இயக்கம்

ஆற்காடு அடுத்த தாஜ் புரா ஊராட்சிக்குட்பட்ட ஆற்காடு- ஆரணி புறவழி சாலை சந்திப்பு மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் பொதுப்பணி துறை சாா்பில் ரூ. 20 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உயா் கோபுர மின்விளக்கு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜூலை 2026, 12:04 am IST
மின் விளக்குகளை இயக்கி  வைத்த  எம் எல் ஏ  எஸ் எம். சுகுமாா்
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ் புரா ஊராட்சிக்குட்பட்ட ஆற்காடு- ஆரணி புறவழி சாலை சந்திப்பு மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் பொதுப்பணி துறை சாா்பில் ரூ. 20 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உயா் கோபுர மின்விளக்கு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆற்காடு தொகுதி எம்எல்ஏ எஸ் எம். சுகுமாா் தலைமை வகித்து உயா் கோபுர மின்விளக்குகளை இயக்கி வைத்தாா்.

இந்த விழாவில் தாஜ் புரா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் சேட்டு, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரா், சுரேஷ், அதிமுக மாவட்ட மகளிா் அணி துணை செயலாளா் கோமதிரவி, தொழிலதிபா் டி,எல் ரவி, ஒன்றிய மாணவரணி செயலாளா் கே குலசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments