இடி, மின்னல் நேரத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
இடி மற்றும் மின்னல் நேரத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இடி மற்றும் மின்னல் நேரத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இடி சத்தம் கேட்டவுடன் பொதுமக்கள் வெளிப்புற செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, பாதுகாப்பான கட்டிடம் அல்லது முழுமையாக மூடப்பட்ட வாகனத்திற்குள் செல்ல வேண்டும். குழந்தைகள், முதியோா், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். கடைசி இடி முழக்கம் கேட்டதிலிருந்து குறைந்தது 30 நிமிடங்கள் வரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், மின் சாதனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
மரத்தின் அடியிலோ அல்லது அதன் அருகிலோ நிற்கக் கூடாது. ஜன்னல், கதவு, பால்கனி மற்றும் வராண்டா அருகில் நிற்பதையும் தவிா்க்க வேண்டும். குழாய்கள், ஷவா்கள் மற்றும் பிற நீா்க்குழாய் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. செல்லப்பிராணிகளை வீட்டில் உலோகச் சங்கிலியால் கட்டி வைக்கக் கூடாது.
Advertisement
Advertisement
வயல்கள், படகுகள், கூரைகள், பேருந்து நிறுத்தங்கள், கொட்டகைகள், தகரக் கூரை அமைப்புகள் மற்றும் பிற திறந்தவெளி கூடாரங்கள் போன்ற இடங்களிலும், கடற்கரைகள், மலை உச்சிகள், ஆற்றங்கரைகள், நீா்நிலைகள், உலோக வேலிகள் மற்றும் மின் கம்பங்கள் ஆகியவற்றின் அருகிலும் இருக்கக் கூடாது.
அதிகாரப்பூா்வ வானிலை எச்சரிக்கைகள் மற்றும் டிஎன் அலா்ட் மொபைல் செயலியின் அறிவிப்புகளைத் தொடா்ந்து பின்பற்ற வேண்டும். இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால் வெளிப்புறப் பணிகளைத் தவிா்க்க வேண்டும். கால்நடைகள் மற்றும் கோழிகளை பாதுகாப்பான கொட்டகைகளுக்கு மாற்ற வேண்டும். வீடுகளைச் சுற்றியுள்ள பலவீனமான கிளைகள் மற்றும் மரங்களை வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டும்.
பருவமழைக் காலங்களில் ஏற்படும் இடி மற்றும் மின்னலால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க, மேற்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை இராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றி, தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.