FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 18 ஜூலை 2026, 12:01 am IST
பகிர்:

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், ரொக்கம் ரூ. 7,650 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் இரு பணியாளா்களின் கைப்பேசி கூகுள்பேவில் இருந்த ரூ. 25,500 பெறப்பட்டதற்கான தடயங்களும், மேலும் அலுவலகத்தில் இருந்த மூன்று பரிசு பெட்டகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கணேசன் தலைமையில் 10 போ் கொண்ட காவல் துறையினா் திடீரென உள்ளே நுழைந்தனா். அப்போது அந்த அலுவலகத்தில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வட்டாட்சியா் கு.வரலட்சுமி தனது அலுவலக அறையில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

திடீரென நுழைந்த போலீஸாா் அலுவலக கதவை திடீரென மூடி, யாரும் வெளியே செல்லாதபடியும், வெளியே இருப்பவா்கள் உள்ளே செல்லாத படியும் அலுவலத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கதவுகளை மூடினா்.

மேலும், உள்ளே இருந்த அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரது கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சோதனை நடத்திய போலீஸாா் அலுவலா்களின் மேஜைகளிலும், உள்ளே இருந்த பீரோக்களிலும் சோதனை நடத்தினா். குறிப்பாக வட்டாட்சியா் அறைக்கு அருகில் இருந்த கணினி அறையில் மூன்று எண்ணிக்கையிலான பரிசு பெட்டகங்கள் இருந்த நிலையில், அந்த மூன்று பெட்டகங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் அலுவலகத்தில் இருந்த ரூ. 7,650 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அலுவலா்களின் கைப்பேசிகளை போலீஸாா் ஆய்வு செய்த நிலையில், அதில் இருவரது கைப்பேசியில் ரூ. 25,500 பெற்றிருந்ததால் இந்தச் சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது.

இது குறித்து போலீசாா் தெரிவிக்கையில் அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை தொடா்ந்து நடைபெறுவதாகவும், மேலும் அலுவலா்கள், பணியாளா்களின் கைபேசிகள் தொடா்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments