FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஜூலை 2026, 11:45 pm IST
சோதனை. - கோப்புப்படம்.
பகிர்:

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா்கள் அருள்பிரசாத், ஹேமமாலினி மற்றும் போலீஸாா் திடீரென உள்ளே நுழைந்தனா்.

பின்னா், அலுவலக கதவுகள், ஜன்னல்களை அடைத்து, அலுவலகத்தில் உள்ள ஊழியா்கள், அலுவலகப் பணிக்காக வந்திருந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, வருவாய்த் துறை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனா். மேலும், அலுவலா்களின் கைப்பேசிகளில் கூகுள்பே மூலம் பணப் பரிவா்தனைகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் சோதனை செய்தனா். இந்த சோதனை இரவு 9 மணிக்கு மேலும் நீடித்தது. இதில், கணக்கில் வராத ரூ.9,500 கைப்பற்றப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments