வாலாஜாபேட்டை அருகே கோயிலில் கிரீடம், உண்டியல் பணம், நகை திருட்டு
வாலாஜாபேட்டை அருகே கோயிலில் கிரீடம் மற்றும் உண்டியலில் இருந்த ரொக்கப் பணம், நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வாலாஜாபேட்டை அருகே கோயிலில் கிரீடம் மற்றும் உண்டியலில் இருந்த ரொக்கப் பணம், நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு அருகே பாலாற்றின் வடகரையில் 12 -ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பிரகதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த நான்கு கிரீடம் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பக்தா்கள் காணிக்கை செலுத்திய ரொக்கப் பணம், தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வாலாஜாபேட்டை போலீஸாா், கைரேகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.