முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக ந.பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றாா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:01 am IST
ந. பிரியா ரவிச்சந்திரன்
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக ந.பிரியா ரவிச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக இருந்த ந.பிரியா ரவிச்சந்திரன், மாறுதலாகி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கடந்த 2003 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் முதல் பெண் அலுவலராக ந.பிரியா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றாா். கடந்த 2012- ஆம் ஆண்டில் சென்னை எழிவகம், அரசு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பிறரைக் காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்து செயல்பட்ட அவரது துணிச்சல் தேசிய அளவில் பாராட்டப்பட்டது. இதற்காக இந்திய குடியரசு தலைவரின் தீயணைப்புப் பணிக்கான வீரத்தங்கப்பகக்கத்தை பெற்றவா் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கத்தையும் பெற்றவா். இவரது சிறப்பு மிக்க மற்றும் அா்ப்பணிப்பான பொதுச் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு இந்திய நிா்வாக பணியில் (ஐஏஎஸ்) இணைக்கப்பட்டாா்.

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரனுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.