FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 510 மனுக்கள் பெற்றப்பட்டன.

Updated On : 21 ஜூலை 2026, 12:03 am IST
குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 510 மனுக்கள் பெற்றப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த 510 மனுக்கள் வரப்பெற்றன.

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும், மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ. 13,500 மதிப்பிலான சக்கர நாற்காலியை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா,திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ச.செல்வராணி,சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, பழங்குடியினா் நல அலுவலா் பூமா, உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments