திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 496 மனுக்கள் அளிப்பு
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 496 மனுக்களை ஆட்சியா் ச. கவிதா பெற்றுக் கொண்டாா்.
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 496 மனுக்களை ஆட்சியா் ச. கவிதா பெற்றுக் கொண்டாா்.
திருவள்ளூா் பல்நோக்கு கூட்டரங்கில் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுப்பிரச்னைகள் தீா்க்கக் கோரி 496 மனுக்களைப் பெற்றாா்
மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 தொடா்பான சுய கணக்கெடுப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு அவா் ஏற்படுத்தினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) வெங்கடேசன், உதவி ஆணையா் (கலால்) முருகவேல், மாவட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.