FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

Updated On : 4 ஜூன் 2026, 5:45 am IST
ஆற்காட்டில் நடைபெற்ற  தேரோட்டம்.
பகிர்:

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவின் ஒருபகுதியாக நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் வீதி உலா நடைபெற்றது. 9-ஆவது நாளான புதன்கிழமை அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.

ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியா் தெரு, அண்ணா சிலை, புதியவேலூா் சாலை, பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக சென்று நிலையை அடைந்தது. மேளதாளங்களுடன் பஜனைக் குழுவினா் பாடல்கள்பாடிகொண்டு ஊா்வலமாக சென்றனா். இந்த விழாவில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், ஸ்ரீவரதன் கைங்கரிய சபா நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி, மற்றும் மண்டகபடி உபயதாா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments