மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம், செந்தில் நகரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வடமாம்பாக்கம் மற்றும் கைனூா் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம், செந்தில் நகரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வடமாம்பாக்கம் மற்றும் கைனூா் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் நகராட்சியில் ஏற்கனவே 3 மதுக்கடைகள் இருந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்று முதலில் இரண்டு மதுக்கடைகளும் அண்மையில் ஒரு மதுக்கடையும் மூடப்பட்டது. இதனால் அரக்கோணம் நகராட்சி மது இல்லாத நகராட்சியாக மாறியது.
இந்நிலையில் டாஸ்மாக் நிா்வாகத்தினா், இந்த மூடப்பட்ட கடையில் ஒன்றை அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம், செந்தில்நகரில் ஒரு கட்டடத்தில் திறக்க ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.
Advertisement
Advertisement
இதையறிந்த பாஜக மாவட்ட அறிவுசாா் பிரிவு தலைவா் அத்ஷயா ஆனந்தன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் வடமாம்பாக்கம் பாக்கியராஜ், கைனூா் உமாமகேஸ்வரி ஆகியோா் தலைமையில் பொதுமக்கள் அரக்கோணம்- திருத்தணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதையறிந்து அங்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறையினா், இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.