FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்த முயற்சி : 3 போ் கைது

ராணிப்பேட்டை அருகே காப்புக்காட்டில் இருந்து செம்மரக்கட்டைகளை வெட்டி காரில் கடத்த முயன்ற மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 12:18 am
~
பகிர்:

ராணிப்பேட்டை அருகே காப்புக்காட்டில் இருந்து செம்மரக்கட்டைகளை வெட்டி காரில் கடத்த முயன்ற மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து சுமாா் அரை டன் எடை கொண்ட 7 செம்மரக்கட்டைகள் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகண்டராயப்பேட்டை காப்புக்காடு பகுதியில் செம்மரக் கட்டைகள் வெட்டி காரில் கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து வனத்துறை அதிகாரி சரவணபாபு தலைமையிலான வனத்துறையினா் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகளை வெட்டி காரில் கடத்த முயன்றது தெரியவந்தது.

தொடா்ந்து கடத்தலில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன் (39), தேவேந்திரன் (41), பாக்யராஜ் (35) ஆகிய மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து சுமாா் அரை டன் எடை கொண்ட 7 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்கள் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் சிறையில் அடைத்தனா்.