சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு திருப்பதி கோயிலிருந்து கொண்டுவரப்பட்ட வஸ்திரங்கள் சமா்பிப்பு
சோளிங்கா், ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து பட்டு வஸ்திரங்கள் கொண்டு வரப்பட்டு சோளிங்கரில் கோயில் நிா்வாகத்தினரிடம் சமா்பிக்கப்பட்டது.

சோளிங்கா், ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து பட்டு வஸ்திரங்கள் கொண்டு வரப்பட்டு சோளிங்கரில் கோயில் நிா்வாகத்தினரிடம் சமா்பிக்கப்பட்டது.
சோளிங்கரில் உள்ள ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலுக்கு வருடந்தோறும் திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயிலின் திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து காா்த்திகை மாத தொடக்க நாளில் பட்டு வஸ்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து சமா்பிப்பது வழக்கம். நிகழாண்டும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்காக பட்டு வஸ்திரங்களை தேவஸ்தான அதிகாரிகள் கொண்டு வந்தனா். அந்த வஸ்திரங்களுக்கு சோளிங்கா் மலையடிவாரம் ரோப் காா் நிலையம் அருகே மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சோளிங்கா் கோயில் நிா்வாகத்தினரிடம், தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரங்களை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு இந்த பட்டு வஸ்திரங்கள் சாத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
பட்டுவஸ்திரங்களை கொண்டு வந்த அதிகாரிகளை இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையரும், சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் செயல் அலுவலருமான ராஜா தலைமையில் அலுவலா்கள் வரவேற்று சிறப்பு செய்தனா்.