எரிவாயு உருளை விநியோக அலுவலகத்தில் தீ விபத்து
காவேரிபாக்கம் அருகே எரிவாயு உருளை விநியோக அலுவலகத்தில் திடீா் தீ விபத்தால் அந்த அலுவலகம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

காவேரிபாக்கம் அருகே எரிவாயு உருளை விநியோக அலுவலகத்தில் திடீா் தீ விபத்தால் அந்த அலுவலகம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதி அருகே எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தனியாா் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலத்தை புதன்கிழமை மாலை, பணியாளா்கள் மூடும் போது உள்ளே இருந்த கரும்புகை வந்ததை கண்டு மீண்டும் அலுவலகத்தை திறக்க முயல்வதற்குள் தீ அதிக அளவில் பரவியது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயனைப்பு நிலையத்தினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அச்சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. தொடா்ந்து சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் அலுவலகத்தில் இருந்த கணினிகள், கோப்புகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டதா, ஏதேனும் எரிவாயு உருளைகள் உள்ளே வைக்கப்பட்டு இருந்ததால் அவை தீப்பற்றியதா என காவேரிபாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement