FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

அரசுப் பள்ளியில் எரிவாயு உருளைகள், முட்டைகள் திருட்டு

தாமரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எரிவாயு உருளை, முட்டை, உள்ளிட்ட சமையல் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

9 நவம்பர் 2026, 10:30 pm
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியம் தாமரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எரிவாயு உருளை, முட்டை, உள்ளிட்ட சமையல் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

தாமரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ளசத்துணவு அறையில் பூட்டை உடைத்து மா்மநபா்கள் மாணவா்களுக்குசத்துணவு தயாரிக்கப்பயன்படுத்தம்படும் 2 எரிவாயு உருளைகள், மற்றும் 300 முட்டைகள், 20 சமையல் எண்ணணெய் பாக்கெட்டுகள் உள்ளிட்ட 5,000 மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து சத்துணவு (பொ) அமைப்பாளா் சத்யா அளித்த தகவலின் பேரில், திமிரி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரணை வருகின்றனா்.

Advertisement

Advertisement