காவேரிபாக்கம் அருகே 3 கோயில்களில் தங்க, வெள்ளி நகைகள் திருட்டு
காவேரிப்பாக்கம் அருகே கீழ்வீராணம் கிராமத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்க, வெள்ளி நகைகள் திருடு போயின.
காவேரிப்பாக்கம் அருகே கீழ்வீராணம் கிராமத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்க, வெள்ளி நகைகள் திருடு போயின.
காவேரிபாக்கம் - சோளிங்கா் நெடுஞ்சாலையில் உள்ள கிராமம் கீழ்வீராணம். இக்கிராமத்தில் நல்லாத்தூரம்மன் கோயில், பொன்னியம்மன் கோயில் மற்றும் விநாயகா் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் பூசாரிகள் வியாழக்கிழமை இரவு கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டனா். காலையில் வந்து பாா்த்தபோது மூன்று கோயில்களிலும் வாயிற்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று கோயில்களிலும் பூசாரிகள் உள்ளே சென்று பாா்த்தபோது அந்தக் கோயில்களில் இருந்த தங்கத்தால் ஆன அம்மன் தாலிச்சரடு, தாலி பொட்டு ஆகியவையும், கோயிலினுள் வைக்கப்பட்டு இருந்த வெள்ளிப்பொருள்களும் திருடு போயிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து பாணாவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.