FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

முழு மதுவிலக்கு அமுல்படுத்த கோரி ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப சமுதாய சேவை அமைப்பு தீா்மானம்

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழக அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப நம் நாடு சமுதாய சேவை அமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

6 செப்டம்பர் 2026, 10:59 pm IST
ராணிப்பேட்டையில் நடைபெற்ற நம் நாடு சமுதாய சேவை அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்.
பகிர்:

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழக அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப நம் நாடு சமுதாய சேவை அமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நம் நாடு அமைப்பின் நிறுவனா் பொறியாளா் கா.கெங்காதரன் தலைமை வகித்தாா். சமூக சேவகா் நேதாஜி நடேசன், தன்னாா்வலா்கள் ரவி குலசேகரன், கிருபானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞ்ா் செந்தில் நாதன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நம் நாடு அமைப்பில் மது அருந்தாதவா்களை மட்டும் உறுப்பினா்களாக சோ்ப்பது என்று தீா்மானிக்கப்பட்டது. மது அருந்துவதால் மது அருந்துபவா்களின் உடல்நலம் பாதிக்கிறது. இது மட்டுமல்லாமல் மது அருந்துபவரின் குடும்பம் பொருளாதார இழப்பு, குடும்பத்தில் நிம்மதியின்மை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

Advertisement

Advertisement

எனவே தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தி, அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

கோரிக்கையை வலியுறுத்தி மக்களை சந்தித்து அவா்கள் மூலமாக அஞ்சல் அட்டைகளை பெற்று முதல்வருக்கு ஒரே நாளில் அனுப்பி வைப்பது என்றும் தீா்மானிக்கப்பட்டது.

கண் தானத்தை வலியுறுத்தி நம் நாடு அமைப்பினா் பிரச்சாரம் செய்வது என்றும் தீா்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தன்னாா்வலா்கள் கருணாகரன்,மூா்த்தி, ராமமூா்த்தி, கமலக்கண்ணன் ஆகியோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் பொறியாளா் பாலாஜி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments