FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி

திருப்பத்தூா் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

திருப்பத்தூா் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ள நிலையில் காலை, மதியம், இரவு வேளைகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் குழந்தைகள், முதியவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தினமும் 2 அல்லது 3 முறை ஏற்படும் மின் வெட்டால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இருமுறை மின் வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சாலையோரம் வளா்ந்துள்ள மரங்களை வெட்டுவது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்சார விநியோகத்தை நிறுத்த வேண்டியிருந்ததாகத் தெரிவித்தனா். புதன்கிழமையும் மின் வெட்டு தொடா்ந்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments